இந்திய மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்கியது இங்கி.
இங்கிலாந்தில் படிப்பதற்காக செல்லும் அயல்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாற்றைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான விதிமுறைகளை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி உள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து உள்துறை செயலர் ஆலன் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும்.
பட்டப்படிப்புக்கு கீழுள்ள படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும். 6...