நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பும் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும்...