9/28/09

என்னைப் பற்றி..

நண்பர்களே! வணக்கம். நல்வாழ்த்துக்கள்.


முதலில் என்னைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பிய உங்களுக்கு என்  நன்றிகள்!

என்னைப் பற்றி சொல்லும் அளவிற்கு என்னை நான் இன்னும் முழுவதும் புரிந்துகொள்ளவில்லை.  எதையாவது சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கவும் நான் விரும்பவில்லை. சுருக்கமாக சொல்ல நான் திருக்குறளும் இல்லை, விரிவாக சொல்ல நான் ஒரு இதிகாசமும் இல்லை. "எனக்குள் என்னை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்".


இருந்தாலும் கடுகு சுருக்கமாக....

அரும்பாவூர் என்ற அழகிய சிறிய கிராமத்தில் எளிய கும்பத்தில் பிறந்த நான் தனிப்பெரும் சிறப்பு கொண்ட நம் தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்தவன். ஜாதி மதங்களில் பற்று இல்லை. இறைவனை மட்டும் நம்புகிறேன். பெற்றோர்களையும் நல்லவர்களையும் மதிக்கக் கூடியவன்.  கல்லூரியில் மின்னணு துறையில் இளங்கலை வரை படித்த நான் எனது இருபத்தி ஒன்றாவது வயதிலிருந்து மின்னணு மற்றும் கணிப்பொறி சம்பத்தப்பட்ட துறைகளில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பும் நல்ல அனுபவங்களும் கிடைத்து நேர்மையான முறையில் படிப்படியாக உயர்ந்து இன்று ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் என்ற நாட்டில் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணிப்பொறி பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். இதுவரை எதுவும் சாதிக்கவில்லை என்றாலும் என் கனவுகளும் லட்ச்சியங்களும் வெற்றிக்கனியாகும் காலம் வெகு அருகில்...

தன்னம்பிக்கை விடாமுயற்சி எனது நண்பர்கள்...
பகுத்தறிவும் புதிய தொலைநோக்குச் சிந்தனையும் எனது பரிமாணங்கள்...

பிடித்த திருக்குறள்...

        ‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
         இடும்பை படாஅ தவர்.’


அதாவது, ‘இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடன் அறிவாளிகள், தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும் படி செய்துவிடுகிறார்கள்.’



6 comments:

CoolGuy said...

nee ouru vena pona dubuku annan... just for funn!!!! cool........... baby.

It is really nice

ravi said...

superb i like u

Dineshkumar said...

poodum paaaaaaaaaaaa...............

arumbavur said...

good but i need more for u

Anonymous said...

Machee nee yengeo poyitte da!!!!

venky

Unknown said...

really nice na.......

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates