YouTube குழுவிற்கு எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
"ஓர் ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற முடியும்." என்ற முதுமொழிக்கு ஏற்ப " உலக மக்களின் பலதரப்பட்ட ஒளிப்படத் திரட்டுகளை உள்வாங்கி உலகின் மிகப் பெரிய ஒரு மாபெரும் சக்தி ஊடகமாக திகழ்கிறது YouTube." "தட்டுங்கள் திறக்கப்படும் - கேளுங்கல் கொடுக்கப்படும்" என்பது தெய்வ வாக்கு. ஆனால் "கேளுங்கல் கொடுக்கப்படும் - தேடுங்கள் கிடைக்கப்பெறும்" என்பது கூகிள் வாக்கு. என்னடா இவன் ஓவர் பில்டப் கொடுக்கிறானே என்று நினைக்காதீர்கள். நான் எனது அனுபவங்களில் இருந்துதான் பகிர்ந்து கொள்கிறேன். கூகிள் தேடு தலத்தில் எந்த ஒரு தகவல் தொடர்பாக தேடினாலும் 99 % நமக்கு பதில் கிடைத்து விடுகிறது. அதே போல YouTube-ல் எந்த ஒரு தேடல்களுக்கும் அது சம்பந்தமான விளக்கம் "ஒளிப்பட" வடிவில் கிடைக்கிறது. படித்து புரிந்து கொள்ள முடியாத விளக்கங்களை கூட சில நேரங்களில் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு மொழி ஒரு தடையாக இருக்க முடியாது. எனது வாழ்க்கையில் நான் YouTube ஐ ஒரு அட்சையப் பாத்திரம் போன்று கருதுகிறேன். கேட்டதைக் கொடுப்பது அட்சையப் பாத்திரம், கேட்ட தகவலை காட்டுவது YouTube என்றால் அது மிகையாகாது.
0 comments:
Post a Comment