6/4/10

இருண்ட கண்டம்

தமிழக கிராமங்களில் தொடர் மின்வெட்டு...!?



கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் மின்வெட்டினை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் சாலை மரியல்கும் நடத்தினர். அதன் விளைவாக சென்ற வாரத்தில் ஒரு நான்கு நாட்களுக்கு மட்டும் ஓரளவிற்கு வெட்டின்றிய சீரான மின்சாரம் கிடைத்தது! அனால் கடந்த நான்கு நாட்களாக நிலைமை என்ன? (குறிப்பாக " பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கிராமப்புற பகுதிகள்.") நான்கு நாட்களில் அதிகபட்சமாக மொத்தத்தில் சுமார் ஒரு பத்து மணி நேரம் தான் மின்சாரமே வந்தது!!!! முன்பாவது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம்தான் மின்வெட்டு இருந்தது. அனால் இப்போது " தங்கள் 'சுய தேவையை மட்டுமாவது பூர்த்தி செய்துகொள்ள' மூன்று அல்லது நான்கு மணி நேரமாவது மின்சாரம் கிடைத்தால் போதும்" என்ற நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி! நமக்கு நாமே "ஆப்பு" வைத்துக் கொண்டோமோ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது!

எங்கள் பகுதி ஏழை விவசாயி ஒருவர்...

"அறுவடை நாள் நெருங்கிடுச்சே? இன்னும் ஒரு நாலு நாளைக்கு தண்ணி பாச்சினா போதுமே, இல்லைனா புள்ளைக பூராவும் கருகி போயிடுமே... அய்யோ.. இந்த பாழாப்போன கரண்ட எப்ப விடுவானுக? ஒரு ரெண்டுமணி நேரம் தொடர்ந்து விட்டாக்கூட எம் புள்ளகள காப்பாத்திடுவேன் சாமி... எம் பொண்டாட்டியோட தாலிய அடகு வச்சுதான் இந்த சாகுபடியே பண்ணினேன்! இனி அதுக்கும் வழி இல்லன்னா...? எங்கயாவது சுடுகாட்ல போயி படுத்துக்க வேண்டியதுதான்...."

எங்கள் பகுதி ஏழை தாய்குலம் ஒருவர்...

தாய்குலம்: "சார், எப்படியாவது புள்ளைய காப்பாத்துங்க, ரெண்டுநாளா காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது, வவுத்தால போயிட்டு வாந்தி எடுத்துகிட்டே இருக்குதுங்க... "

அ. மரு: "ஏம்மா? புள்ளைய இப்படியா கவன கொரவா பாத்துகிறது? இங்க பாரு... ஒடம்பு பூரா ஒரே கொசு கடி... கடைசி டைம்ல கொண்டு வந்துட்டு அப்புறம் எங்கள கொற சொல்லறது...

தாய்குலம்: "என்ன சார் பண்ணறது..? பகலு பூராவும் அக்னி வெயிலு கொளுத்துது.. ராவானா கொசுத் தொல்ல... வீதீல சாக்கட கட்டி உட்டதோட சரி..., இதுவரைக்கும் யாரும் வந்து சுத்தம் பன்னது இல்ல... அப்படியே அதிசயமா வந்துட்டாலும் சாக்கடய அள்ளி அங்கேயே போட்டுட்டு போயிடறாங்க... கொஞ்ச நேரமாவது கொலந்தைகல பேன் காத்துல போடலாமனு பாத்தா... பத்தாததுக்கு.. இந்த நாசமாபோனவணுக ராத்திரி பகல்னு பாக்காம கரண்ட கட் பண்ணிடறாங்க.. நாங்கெல்லாம் புள்ளைங்கள வச்சுகிட்டு வாழரத சாகரதான்னு தெரியலைங்க சார்.... ?? "

அ. மரு: அதெல்லாம் எனக்கு தெரியாது... அது எங்க டிபார்ட்மென்டும் வேலையும் கிடையாது... சரி சரி.. ஊசி போட்டாச்சு... மாத்திரைய வாங்கிட்டு எடத்த காலி பண்ணு... உன்ன மாதிரி இன்னும் எத்தன பேரு நிக்கிறாங்க பாரு...

"முன்னறிவிப்பில்லாத தொடர் மின்வெட்டு" காரணமாக, இப்படி இன்னும் பல கொடுமைகள் தினசரி எங்கள் சுற்று வட்டாரத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது... நாங்கள் எங்கு சென்று யாரிடம் முறையிடுவது? தனியாக சென்று கேட்டாலும் சரி, கூட்டமாக சென்று கேட்டாலும் சரி... ஏதாவது ஓர் வகையில் ஆப்பு வைப்பார்கள் என்பது உறுதி...! என்னதான் பண்ணுவது...? சரி... கொதித்து எழலாம் என்றால் ஒடுக்கபடுவதற்கு என்றே அடக்குமுறை காத்திருக்கிறது... போட்டதை தின்று விட்டு 'அடிமாடு' போல் அடங்கி போகலாம் என்றால் 'ஆண்மை' இல்லையா என்று அடிமனம் குமுறுகிறது... சரி.. போராடத்தான் முடியவில்லை... புலம்பியாவது தள்ளலாம்....

இதற்க்கெல்லாம் காரணம் "பற்றாக்குறை" என்கிறார்கள்...! பற்றாக்குறைக்கு என்ன காரணம்...? நாம் தேவைக்கு அதிகமாக செலவிடுகிறோமா...? அல்லது.. நம் தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லையா...? இல்லை.. நமக்கு கிடைக்க வேண்டியது வேறு எங்கோ மறைமுகமாக செலவிடப்படுகிறதா...? இதில் எது உண்மை..? இதுவரை இல்லாத பற்றாக்குறை இப்போது எப்படி புதிதாய் வந்தது...?

அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் எத்தனையோ பேர்!

> நாம் தேவைக்கு அதிகமாக செலவிடுகிறோமா...?

இதில்... நம்மில் 20 % பேர் தேவைக்கு அதிகமாகவோ கவனக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ செலவிடுவதாக வைத்துகொள்வோம்... இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது தேவைப்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு என்று சொல்ல முடியுமா...? ஏன் தொலைநோக்கு சிந்தனை நம்மில் பலருக்கும் இல்லை... ?

> நம் தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லையா...?

நம் தேவையை நாம் மிகச் சரியாக உணர்ந்தால் மட்டுமே முடியும்...! மேலும்.. எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க நாம் மிகுந்த விழிப்புடனும் மாற்று திட்டத்துடனும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...!! அப்படி எதுவும் நம்மிடம் இல்லை...!!?

> இல்லை.. நமக்கு கிடைக்க வேண்டியது வேறு எங்கோ மறைமுகமாக செலவிடப்படுகிறதா...?

கிட்டத்தட்ட 80 % அடிப்படை மக்களுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லலாம்..! அப்படி என்றால்.. இவை எங்கு செலவிடப்பட்டிருக்கலாம்...? முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் நகரங்களுக்கும், தினசரி புதிது புதிதாய் தோன்றிக்கொண்டிருக்கும் "பினாமிகளின்" தொழிற்சாலைகளுக்கும், காலம் தவறாமல் நடக்கும் கட்சி மாநாடுகளுக்கும், முக்கியப் பிரமுகர்கள் வீட்டு கல்யாணம் மற்றும் வைபோகங்களுக்கும்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...!

அப்படியென்றால்... தொழில் அதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டும் தான் முக்கியமா? விவசாயிகளும் கிராம புற மக்களும் முக்கியம் இல்லையா? இவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா? அல்லது வாழ தகுதியற்றவர்களா?
மனிதன் உயிர் வாழ எது முக்கியம்? உயிர் தொழிலா?( விவசாயமா? ) இல்லை... உயர் தொழிலா? ( தொழிற்சாலைகளா? )
இது போன்ற சமூக பிரச்சனைகளை தனி மனிதனால் சமாளிக்க முடியாது என்பதால் தான் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டது "அரசாங்கம்". அந்த அரசாங்கத்தை நிர்வாகிக்க நாமே தேர்ந்தெடுப்பதுதான் "அரசு".
காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நாம் ஒவ்வொருவரும் செய்யும் அன்றாட செலவுகளில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ "வரி" செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நம்மை நிர்வாகிக்க நம்முடைய வரிப்பணம்தான் நமக்கு "அரசு" மூலமாக செலவிடப் படுகிறது. நமக்கு  யாரும் இலவசமாக எதையும் கொடுத்து விடவில்லை... அப்படி அனைவருக்கும் பொதுவான சொத்தை யாரோ சிலர் மட்டும் திருட விடலாமா...? ஏன் அது அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை..? (நான் இங்கு அனைவரும் திருட வேண்டும் என்று சொல்லவில்லை) ... சிந்தியுங்கள். அரசில் இருப்பவர்கள் "சிலர்" சொல்கிறாகள்... "தன் மக்கள் நலம்.. தன் நலம்" இதை நன்கு உணர்ந்து பாருங்கள் புரியும்.. "தன் மக்கள்" நலம்... "தன் நலம்"

இப்படி தன்னலம் கருதி நம்மில் பலர் கிடைப்பதை சுருட்டிகொல்லுவதால் தான் அது இறுதியில் அனைவரையும் பாதிக்கிறது... சுருட்டிகொண்டவன் தப்பித்துக் கொள்கிறான். பாமரன் பாதிக்கப்படுகிறான்.

நமது கண்களை (மக்கள்) நமது கைகளால் (தவறான அரசியல்) நாமே குத்திக் கொள்ளலாமா (அழித்துக்கொல்லுதல்)?

I don't know... what the "F" is going here!!

திருடனைப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

"அடிமாடு" வாழ்க்கையா? "ஆண்மை" தனமான வாழ்க்கையா? நடப்பது நடக்கட்டும்....

தங்களின் முத்தான கருத்துக்களும் பொன்னான ஓட்டுக்களும் தான் என்ன பதிவுகளுக்கு படிக்கட்டுகள்...


4 comments:

பனித்துளி சங்கர் said...

//////"அறுவடை நாள் நெருங்கிடுச்சே? இன்னும் ஒரு நாலு நாளைக்கு தண்ணி பாச்சினா போதுமே, இல்லைனா புள்ளைக பூராவும் கருகி போயிடுமே... அய்யோ.. இந்த பாழாப்போன கரண்ட எப்ப விடுவானுக? ஒரு ரெண்டுமணி நேரம் தொடர்ந்து விட்டாக்கூட எம் புள்ளகள காப்பாத்திடுவேன் சாமி... எம் பொண்டாட்டியோட தாலிய அடகு வச்சுதான் இந்த சாகுபடியே பண்ணினேன்! இனி அதுக்கும் வழி இல்லன்னா...? எங்கயாவது சுடுகாட்ல போயி படுத்துக்க வேண்டியதுதான்...." ////////


யாருக்கு கேக்கப் போகிறது இந்த கதறல்கள் .

அந்நியன் said...

நண்பரே, தங்களின் இனிய வரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்... தங்களின் வலைப் பூக்கள் மிகவும் அருமை...

Anonymous said...

Your Post Is One Of Top Ten Posts
http://www.sinhacity.com/

Anonymous said...

மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates