6/6/10

மதம்? மனிதம்?


நாம் யார்?
ஒரு வகை உயிரினம்.

நாம் எங்கே இருக்கிறோம்?
இந்த பூமியில்.

இந்த பூமி எங்கே இருக்கிறது?
சூரியக் குடும்பம் எனும் பால்வளித்திரலில்.

இந்த சூரியக் குடும்பம் எங்கே இருக்கிறது?
கோடிக்கான பால்வளித்திரல்கள் நிறைந்த "அண்டம்" என்பதில்.

இந்த அண்டம் எங்கே இருக்கிறது?
??????????????????????????????????????????????????????
இந்தக் கேள்விக்கு விடை "முடிவிலி"யாகத்தான் இருக்க முடியும்...!!
" மானுடம் தேடும் மாயை அது "

சரி, அது போகட்டும்!


இந்த பூமி எப்படி தோன்றியது?
கிட்டத்தட்ட 14 கோடி ஆண்டுகளுக்கு முன் "BIG BANG " என்ற "அண்டப் பிரளயம்" நடந்த போது தோன்றியதில் ஒன்றுதான் "சூரியக்குடும்பம்" என்ற நாம் பூமி அடங்கிய பால்வளித்திறல்.

இந்த பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியது?
காலப்போக்கில் இயற்கையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்கள் (உயிரியல் விளைவுகள்) காரணமாக....

இந்த பூமியில் முதலில் தோன்றிய உயிரினம் எது?
ஒரு செல் உயிரினம்... (அறிவியல் பூர்வமாக ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை) எ.கா. அமீபா.

மனித உயிரினம் எவ்வாறு தோன்றியது?
காலப்போக்கில் இயற்கையாக ஏற்பட்ட உயிரியல் மாற்றங்களால் தோன்றியதுதான் மனித உயிரினம் என்றும் அறிவியல் சான்றுகள் விளக்குகின்றன...

மனித உயிரினம் எப்போது தோன்றியிருக்கலாம்?
கிட்டத்தட்ட 40000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம் என்று அறிவியல் சான்றுகள் விளக்குகின்றன...


மரியாதைக்குரியவர்கள்: தோடா... இப்ப இன்னாதா சொல்ல வர்ற...?

நான்: சாரி பாஸ்... காண்டாகாத... தோ பாரு.. மேட்டர் இன்னான்னா...?


நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் மனித இனத்திற்கு உண்டான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் "மனிதன்" என்ற முழுமை நிலையை அடைந்தது வெகு சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் என்பது நம்மால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.. அதற்கு முன் மனிதனும் "ஆறறிவு" அற்ற விலங்குகளாய்தான் திரிந்துகொண்டிருந்தான்.  காலம் மாற மாற இயற்கையின் கட்டாயத்தாலும் சூழ்நிலையின் காரணத்தாலும் தனது ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி தனது தேவைகளை கண்டுபிடித்து ஆட்கொள்ளத் தொடங்கினான். விலங்குகளிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான விலங்காக மனிதன் இருந்தால் தன் இனத்தை அவனால் எளிதாக காத்துக்கொள்ள முடிந்தது... இப்படி விலங்குகளாக இருந்த மனிதன் தனது கூட்டம் பெருகப் பெருக தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட முதன்மையான மிகப்பெரிய முன்னேற்றம்தான் "சைகை" என்ற சங்கேத மொழியாக இருந்திருக்கக்கூடும்..

சங்கேத மொழியின் அடுத்தகட்ட அபரிமிதமான வளர்ச்சிதான் "மொழி".... (அது என் தாய்மொழி "தமிழ்"ஆக இருக்குமானால் எனக்கும் பெருமைதான்). இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் மனிதன் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழத் தொடங்கினான்.. இவ்வாறு கூட்டமாக வாழக் கற்றுக்கொண்ட அவன் கூட்டம் என்று ஒன்று இருந்தால் அதை கட்டுபடுத்த "தலைமை" என்று ஒன்று வேண்டும் என்பதை உணர்ந்தான்...

இப்படி என்னதான் தலைமை பொறுப்பை ஏற்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றாலும் அவனுள் "காட்டுமிராண்டித்தனம்" அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது... ஆனாலும் இயற்கைக்கும் தன்னை மிஞ்சிய சக்திகளுக்கும் அவன் பயந்துகொண்டுதான் இருந்தான். இந்த "பயம்" என்றதை ஆதாரமாகப் பயன்படுத்திக்கொண்டு அவன் படைத்தது தான் "மாயை" (VIRTUAL POWER) (அசாதாரண மெய்நிகர் சக்தி) என்ற “நம்பிக்கை”... இதில் தீமை செய்பவை "பேய்' என்றும் நன்மை செய்பவை "கடவுள்" என்றும் அவன் தன் கூட்டத்தை நம்ப வைத்து கட்டுப்பாட்டில் வைக்கத் தொடங்கினான்.... பின்பு காலப்போக்கில் அவனுடைய படிப்படியான அறிவுப்பூர்வமான மற்றும் பரிணாம வளர்ச்சியைதான் "நாகரீகம்" எனலாம். அந்த நாகரீகம் வளர வளர அவனுடைய சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப வளர்ந்ததுதான் "கலாச்சாரம்". இவ்வாறு காலப்போக்கில் மனித இனம் பெருகப் பெருக பலதரப்பட்ட நாகரீகங்களும் பல்வேறு வகையான கலாச்சாரங்களும் தோன்றினாலும் பெரும்பான்மையானோர் காட்டுமிராண்டித்தனம்மகவே வாழ்ந்து வந்தனர். இப்படியே மனித இனம் பெருகப் பெருக தங்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளாலும் போட்டி பொறாமைகளாலும் மனித இனம் அழிந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் சில அறிவு படைத்தவர்கள் தம் மனித இனத்தை பண்படுத்த தொடங்கினார்கள்...

இப்படிப் பிறந்ததுதான் "பண்பாடு". என்னதான் பண்பாட்டை ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அவனுள் மிருக உணர்ச்சி தலைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருந்தது... வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்ச்சியில் பல்வேறு நாகரீகத்தையும் பல்வேறு கலாச்சாரத்தையும் உருவாக்கிக்கொண்டே பறந்து விரிந்து கொண்டிருந்தது மனித இனம்...
இவ்வாறு கட்டுப்பாடின்றி மிகப்ப பிரம்மாண்டான அளவில் பரந்து விரிந்து கொண்டிருந்த மனித இனத்தை ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற [ பொதுநலமா (அ) சுயநலமா என்பது தெரியாது ] நோக்கத்தில் அபரிமிதமான சக்திகளுடனும், தத்துவங்களுடனும் மனிதனால் படைக்கப்பட்ட "மாயை"யின் மறுஉருவம் தான் "மதம்". இந்த மதம் என்ற மந்திர சக்தி ஆரம்பத்தில் வரவேர்க்கப் படவில்லை என்றாலும் பல போராட்டங்களுக்குப் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவ ஆரம்பித்தது...

ஆனால்....! உண்மையிலேயே மனித இனத்தின் அழிவு இங்குதான் ஆரம்பித்தது எனலாம்....!! ஆம்... எப்படி என்றால்..? எப்படி ஒரு உயிரினத்திற்கு இரண்டு உயிர் இருக்க முடியாதோ!? எப்படி ஒரு பிறப்பிற்கு இரண்டு தாய் இருக்க முடியாதோ!!? அதே போல மதமும் ஒரே தாய்க்கு பிறந்த ஒரே உயிராக இருந்திருக்க வேண்டும்...!!! ஆனால், மதத்தைப் படைத்த மனிதனின் "ஆறாம் அறிவு"தான் அவனின் சாபக் கேடோ என்னமோ...? ஒரே மாதிரியான சிந்தனையால் பல்வேறு இடங்களில் குறுகிய கால கட்டத்தில் "பல்வேறு" மதங்களை உருவாக்கி விட்டான்... சரி, அப்படியே பல மதங்கள் உருவாகி இருந்தாலும் அதில் அனைவரும் வலியுறுத்திய தத்துவங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்...

ஆனாலும், மனித இனம் அன்போடும் பண்போடும் வாழ்வதற்காக மதத்தின் மூலமாக சொல்லப்பட்ட தத்துவங்களை எல்லாம் விட்டுவிட்டு என் மதம்தான் உயர்ந்தது என் மதம்தான் பெரியது என்று மதம் மதம் என "மதம்" பிடித்து மனிதனை மனிதனே அழித்துக்கொல்கிறான்... ஒரு மனிதன் எங்கு பிறக்கிறானோ அதைப் பொறுத்துதான் அவனுடைய மதம் அவனைப் பற்றுகிறது... அது அவனை பண்படுத்தும் கவசமாக இருக்க வேண்டுமே தவிர அதுவே அவனையே அழிக்கும் ஆயுதமாக ஆ(க்)கிவிடக்கூடாது.

நான் இங்கு எந்த ஒரு மதத்தையும் குறை கூறவில்லை.. ஆனால், 'மதம்' என்ற பெயரில் "மதம்" பிடித்து அழிய வேண்டாம் என்றுதான் வலியுறுத்துகிறேன்..


" மனிதம்" "மதம்"

மனிதம் என்பதில் மதம் அடங்கட்டும்...! அனால் மதம் என்பதில் மனிதம் அடங்கலாகுமோ...?

அன்பை விதைப்போம், அறத்தை வளர்ப்போம், மனிதம் காப்போம், மகிழ்ச்சியாய் வாழ்வோம்.


வருகைக்கு நன்றிகள்... வந்தற்கு வேண்டுகோள்...


சொற்க் குற்றம் இருப்பின் மன்னிக்கவும்... பொருட் குற்றம் இருப்பின் விளக்கவும்...

தங்களின் முத்தான கருத்துக்களும் பொன்னான ஓட்டுக்களும் தான் என் பதிவுகளுக்கு படிக்கட்டுகள்...1 comments:

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates