அரசாங்கத்தை உருவாக்குவது மக்கள். ஆனால், மக்களை உருக்குலைப்பது அரசாங்கம்...!?
காரணம்.. பதவி, பணம், அதிகாரம்...!
மக்களாட்சி என்பது பெயரளவில் தான்.. ஆட்சி அமைத்தவுடன் அதிகாரம் அவர்கள் கையில்.. முதல்வரின் அதிகாரம் அமைச்சர்கள் மேல் பாய்கிறது, அமைச்சர்களின் அதிகாரம் அந்தந்த துறை நிர்வாகிகள் மேல் பாய்கிறது, துறை நிர்வாகிகள் அப்பாவி பொதுமக்கள் மீது காட்டுகிறார்கள்...
இதில் எவரேனும் உண்மையாய் நடந்தால்... அவர்களின் பதிவிக்கும் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் கிடையாது... ஒவ்வொருவரும் தங்களை காத்துக்கொள்ள தாழ்ந்து போகிறார்கள்... (சுயமரியாதை அற்ற, ஆண்மைதனமற்ற உரிமையை கடமையை செய்ய இயலாதவர்களாக) இதுபோக, ரத்த புற்று நோய் போல அரசின் உடல் முழுவதும் பரவியுள்ள லஞ்சம்... மக்களின் பணத்தை மறைத்துவைத்து மதிப்பில்லாமல் கருப்பாகி அவர்களும் பயன்படுத்த முடியாமல் எவருக்கும் பயன்படாமல் மக்கி மன்னாகச் செயும் கருப்புப்பன கனவான்கள்.. அறிவுக்கு அல்லாது விலைக்கு கிடைக்கும் கல்வி... ஒருசார் செய்திகளையும் பரப்பியும் பகுத்தறிவை குழிதோண்டி புதைக்கும் மீடியாக்கள், மிஞ்சியுள்ள அறிவை மழுங்க வைத்து உயிரையும் குடிக்கும் மதுக்கடைகள், கலாச்சாரத்தை வளர்க்காமல் ஒழுக்கத்தை சீர்குலைத்து வன்முறையை வளர்த்துவிடும் பல சினிமாக்கள், மனிதம் எது என்பதை உணராத மதவாதிகள், தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசு, எதற்கும் ஆகாத எதிர்கட்ச்சிகள், எதையும் எளிதாய் மறக்கும் மக்கள்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
மனிதன் படிப்படியாக கலாசாரம் கல்வி என்று உயர்ந்தும் பயனில்லை... வரலாற்றில் நாம் எப்படி வந்தோம் என்கிற உண்மைகள் அந்தந்த கால ஆட்சிகளால் மறைக்கப்பட்டுது மாற்றப்பட்டது உண்மையென்றால், இன்னும் சில நூறு வருடங்களில் சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே மனிதனை அடிமைகள் ஆக்கி ஆளப்போகிறார்கள் என்பதும் உண்மை...
மக்களே விழித்திருங்கள்...!
பெற்ற சுதந்திரத்தை பறிகொடுத்து விடாதீர்கள்...!?
மீண்டும் ஒரு உள்நாட்டு சுதந்திர போராட்டத்திற்கு வழிவகை செய்துவிடாதீர்கள்..!
தன்மானத்தை விட இந்த உலகில் பெரிய விஷயம் எதுவும் இல்லை...
உன் உரிமையை பெற நீ நீயாக இரு...
எவனுக்கும் அடிமாடாய் விலைபோகாதே...
அரைகுறை வாழ்க்கை வாளாதே...
ஆண்மைத்தனமற்றவ்னாய் இருக்காதே...
ஆற்றல்மிக்கவனை இரு...
நாம் உருவாக்கிய அரசு லஞ்சம் மற்றும் ஒழுங்கீனத்தல் இன்று புரையோடிய புண் போல ஆகிவிட்டது..
நாம் செய்த தவறை நாம் தான் சரி செய்ய வேண்டும்...
ஒரு கை ஓசை தராது...
ஒவ்வொரு கையும் சேர்ந்தால்தான் ஓசை கேட்கும்...
அழகான அறிவான ஆற்றல்மிக்க அரசை உருவாக்குவோம் என்ற ஓசை ஓங்கிக் கேட்க வேண்டும்...
ஒவ்வருவருக்கும் இது என் நாடு, என் அரசு, என் உரிமை, என் கடமை என்ற சுயநலம் வேண்டும்.. எவருக்கும் எதுவும் இலவசம் கிடையாது... உன் வாழ்க்கை வாழ்வதற்கு உரிய விலையை நீ கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாய்.. இருந்தாலும் நீ எமாற்றப்படுகிறாய் என்பதை உணர்ந்து உன் உரிமைக்காக போராடு.. பஞ்சாயத் போர்டு முதல் பார்லிமென்ட் வரை சிவிலியன் (சாதாரண குடிமகன் ) ஒவொருவரும் தன் கடமையை நேர்மையாக செய்தால் போதும்.. நாம் அனைவரும் பணக்காரர்கள் தான்... நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கிடைக்கும்...
ஐசக் நியுட்டன் கூட 1000 முறை தோற்றுதான் பின்பு வெற்றி கண்டார்..
வளமான எதிகாலத்தை பெற...
வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்..
மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவோம்..
நாம்தான் வாழவில்லை... நம் சந்ததியினராவது நிம்மதியாய் வாழட்டும்...
1 comments:
நண்பரே... தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை...
நட்புடன்...
இராச. பாண்டியன்.,
Post a Comment